‘களு பாலம்’ என அழைக்கப்படும் பேராதனை மற்றும் சரசவி உயன தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான பகுதியில் மகாவலி ஆற்றின் குறுக்கே நிர்மாணிக்கப்பட்டுள்ள தொடருந்து பாலத்தை இரட்டைப் பாதையாக அபிவிருத்தி செய்ய அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (08.12.2025) அது தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேதங்கள்
“டித்வா” புயலால் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் கண்டி மாவட்டம் அதிக பாதிப்புக்களை சந்தித்திருந்த நிலையில் குறித்த பாலமும் அதிகளவில் சேதமடைந்திருந்தது.

இதன்காரமணாக, குறித்த பாலத்தைத் திருத்தியமைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த தொடருந்து பாலத்தை இரட்டைப் பாதையாக அபிவிருத்தி செய்ய அரசாங்கத்தின் அவதானம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று (08.12.2025) மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

