முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை : குறைக்கப்பட்ட போக்குவரத்து கட்டணம்

நாகப்பட்டினத்திலிருந்து (Nagapattinam) இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு (Kankesanturai) இயக்கப்படும் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவையின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் தலைவர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (01) செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

காங்கேசன் துறை

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு சுபம் நிறுவனத்தின்
சார்பில் சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகின்றது.

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை : குறைக்கப்பட்ட போக்குவரத்து கட்டணம் | Kankesanturai Nagapattinam Ferry Service Payment

வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து ஆறு நாட்கள் இயக்கப்பட்டு வரும் கப்பல்
சேவையில் இரு நாட்டு பயணிகளும் பயன் பெற்று வருகின்றனர்.

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கடந்த ஒகஸ்ட்
மாதம் முதல் சிவகங்கை கப்பல் சேவை இயக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய நிறுவன தலைவர், அதில் கோடை
விடுமுறையை முன்னிட்டு பயணிகளை கவரும் விதமாக தற்போது 8,500 ரூபாயாக உள்ள சென்று
வருவதற்கான கட்டணம் 8000 ரூபாவாக குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இலவச பயணபொதி

அத்தேடு, தற்பொழுது 10 கிலோ வரை அனுமதிக்கப்படும் இலவச பயணபொதி இனி 22 கிலோ வரை
அனுமதிக்கப்படும் என்றும் அதில் 7 கிலோ கைப்பை 15 ஒரு கிலோ பயணபொதி இலவசமாக
அனுமதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை : குறைக்கப்பட்ட போக்குவரத்து கட்டணம் | Kankesanturai Nagapattinam Ferry Service Payment

மேலும் ஜூன் முதல் வாரத்தில் 250 பேர் பயணிக்க கூடிய கப்பல் இயக்கப்பட
உள்ளதாகவும், கார்கோ கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு
வருவதாக நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGallery

https://www.youtube.com/embed/usJEbkC9hZI

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்