முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் மீது கடும் குற்றச்சாட்டு

முல்லைத்தீவு (Mullaitivu) கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் உறுப்பினர்களின்
கேள்விகளுக்கு பதில் தெரிவிக்க முடியாது என சபையை நிறுத்தி வெளியேறியுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றையதின (16) சபை அமர்வில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சின்னராசா
லோகேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டு
வருகின்றது.

 சபை அமர்வு

இந்தநிலையில், நேற்றையதினம் (16) இடம்பெற்ற சபை அமர்வில் ஏற்பட்ட காரசாரமான
வாக்குவாதத்தையடுத்து, சபை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நிறைவு
செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து இன்றையதினம் (17) கரைதுறைப்பற்று
பிரதேச சபையின் உறுப்பினர் இரத்தினம் ஜெகதீசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் மீது கடும் குற்றச்சாட்டு | Karaitivu Clerk Faces Backlash For Power Misuse

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “உபதவிசாளரின் அதிகாரம் என்ன
என்பது தெரியாத ஒருவரை தவிசாளராக நியமித்தது கட்சியின் மிகப் பெரிய தவறாகும்.

இதனை நினைத்து வெட்கி தலை குனியும் நிலையில் உள்ளேன்.

சபையில் பிரேரணை

சபையில் பிரேரணையை முன் வைக்கும் போது தவிசாரளர் எதுவும் கூறாமல் சபையை விட்டு
வெளியேறியிருப்பது அநாகரிகமான செயற்பாடு.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் மீது கடும் குற்றச்சாட்டு | Karaitivu Clerk Faces Backlash For Power Misuse

அவ்வாறு செல்லும் முன் உபதவிசாளரிடம்
பொறுப்பை ஒப்படைத்து சென்றிருக்க வேண்டும் ஆனால் அவர் எந்த அதிகாரத்தையும்
உபதவிசாளருக்கு வழங்காமல் அனைத்து அதிகாரங்களையும் தன்வசம் வைத்திருக்கிறார்.

இது தலைமை பண்பின்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

அத்துடன் ஊடகவியலாளரை செய்தி சேகரிப்பதற்காக உள்ளே அனுமதிக்க பல்வேறு
கட்டளைகளை பிறப்பித்து வருகின்றார்.

அடையாள அட்டை

தவிசாளர் ஊடகங்களை உள்ளே அனுமதிப்பதற்கு அச்சப்படுவதால்
மட்டுமே இத்தகைய கட்டளைகளை பிறப்பிக்கின்றார்.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் மீது கடும் குற்றச்சாட்டு | Karaitivu Clerk Faces Backlash For Power Misuse

கரைதுறைப்பற்று பிரதேச சபை
தற்போது தவிசாளரின் தன்னிச்சை முடிவுகளின் கீழ் இயங்கிவருகின்றது” என தெரிவித்துள்ளார்.

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து
உறுப்பினர்களும் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது அதிருப்திகளை வெளிப்படுத்தி
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்