2003ஆம் ஆண்டு காலப்பகுதியில் வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் பயின்ற 7 மாணவர்கள் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்படுகின்றனர்.
மறுநாள் குறித்த பாடசாலையில், கடத்தப்பட்ட மாணவர்களுக்காக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
அன்று இரவு போராட்டத்தை முன்னெடுத்தவர்களின் வீடுகள் உடைக்கப்பட்டன.
வாழைச்சேனை இந்துக் கல்லூரியின் அதிபர் அப்போதைய முருகேசு தவராஜாவும் அன்று தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
அவரை தாக்கியதில் ஒருவர் உயிருடன் இருப்பதாக பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…

