முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(keheliya rambukwella) உள்ளிட்ட மூவருக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இலங்கைக்கு தரமற்ற மருந்து இறக்குமதி செய்த குற்றச்சாட்டில், விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த அவர் கடந்த பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்தும் விளக்கமறியல்
தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த அவர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் இன்று புதன்கிழமை (11) மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
அமைச்சர் பதவியிலிருந்து விலகல்
இதேவேளை, கைது செய்யப்படும் போது அமைச்சராக இருந்த கெஹெலிய ரம்புக்வெல்ல, பெப்ரவரி 06 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி அமைச்சர் பதவியிலிருந்து விலகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.