முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முக்கிய தொழிலதிபர் கென் பாலேந்திரா காலமானார்

இலங்கையின் பெருநிறுவனத் தலைவரும் நிர்வாகியுமான தேசமான்ய கந்தையா (“கென்”) பாலேந்திரா இன்று தனது 85ஆவது வயதில் காலமானார்.

இந்த தகவலை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் – இனுவில் பகுதியில் பிறந்த பாலேந்திரா கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர். 1940 இல் பிறந்த பாலேந்திரா இலங்கையிலும் தெற்காசிய பிராந்திய வலயத்திலும்  செல்வாக்குமிக்க பல நிறுவன பதவிகளை வகித்துள்ளார். 

பல பதவிகள் 

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முதலாவது இலங்கைத் தலைவரான இவர், இறக்கும் போது பொதுநலவாய அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடமையாற்றியிருந்தார்.

சிலருக்கு கென் என்றும் சிலருக்கு பாலா என்றும் அறியப்பட்ட பாலேந்திரா ஒரு புகழ்பெற்ற நபராக இருந்தார்.

முக்கிய தொழிலதிபர் கென் பாலேந்திரா காலமானார் | Ken Balandra Passes Away

பாடசாலை காலத்தில் சிறந்த ரகர் வீரராக திகழ்ந்த பாலேந்திரா, பெருந்தோட்ட நிர்வாகியாகவும் ஆற்றல் மிக்க கூட்டாண்மை தலைவராகவும் தன்னை உருவாக்கிக் கொண்டார்.

1980களில் ஜோன் கீல்ஸ் நிறுவனத்தை, காலனித்துவ காலத்து தேயிலை தரகு நிறுவனத்தில் இருந்து நாட்டின் மிகப்பெரிய கூட்டாண்மை நிறுவனமாக மாற்றியதில் பாலாவின் பங்களிப்பு அளப்பரியது. 

அதேவேளை, அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்