கேரளா கஞ்சாவினை சூட்சுமமான முறையில் பதுக்கி வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை – சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் வைத்தே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் பெறுமதி, 50 இலட்சத்திற்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினர்
கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்
அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடந்த புதன்கிழமை(5) இரு சந்தேக நபர்கள் பெருந்தொகையான கேரளா கஞ்சா
மற்றும் ஒரு தொகை பணத்துடன் கல்முனை விசேட அதிரடிப்படையினர் இரு வேறு
சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதன்படி 5 நாட்களாக தடுப்புகாவலில்
வைக்கப்பட்ட மேற்படி இரு சந்தேக நபர்களிடம் விசேட அதிரடிப்படையினரின் மேலதிக விசாரணைகளின் பிரகாரம் குறித்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இத்தேடுதலில் 33 வயது மதிக்கத்தக்க
ஒராபி பாஸா வீதியை சேர்ந்த சந்தேக நபரான வீட்டு உரிமையாளர் கைது
செய்யப்பட்டுள்துடன் 18 கிலோ 169 கிராம் கேரளக் கஞ்சா வீட்டில் வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.