கனடாவில் இந்தியாவால் கொல்லப்பட்டதாக கூறப்படும் காலிஸ்தான் போராளி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஒரு கனேடியர் அல்ல என
கனேடிய எதிர்க்கட்சித் தலைவர் மாக்சிம் பெர்னியர்(Maxime Bernier) கூறியுள்ளார்.
அத்துடன், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றய சர்ச்சைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்ப ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையைப் பயன்படுத்தியதாகக் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வழங்கப்படாத ஆதாரங்கள்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்திய தூதரக அதிகாரிகள் நம் நாட்டுக்குள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கனேடிய காவல்துறை மற்றும் லிபரல் அரசாங்கத்தால் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், அவை முறையாக எதிர்கொள்ளப்பட்டே ஆகவேண்டும்.
எனினும், இதுவரை அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை.
மற்ற சர்ச்சைகளில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக இந்த நெருக்கடியை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பயன்படுத்திக்கொள்வது தெளிவாகத் தெரிகிறது.
இருப்பினும், ஒரு கட்டுக்கதை அகற்றப்பட வேண்டும், இந்த சர்ச்சையின் மைய நபரான, கடந்த ஆண்டு கொல்லப்பட்ட காலிஸ்தான் போராளி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், ஒரு கனேடியர் என்பது ஒரு கட்டுக்கதைதான்.
நிஜ்ஜார் கனேடியர் அல்ல
உண்மையில் அவர் 1997 ஆம் ஆண்டு தொடங்கி கனடாவில் தஞ்சம் கோருவதற்கு மோசடி ஆவணங்களைப் பயன்படுத்திய ஒரு வெளிநாட்டு பயங்கரவாதி ஆவார்.
அவரது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட போதிலும் அவர் இந்த நாட்டில் தங்க அனுமதிக்கப்பட்டார்.
If true, allegations made by the RCMP and the Liberal government that Indian diplomats participated in criminal activities on our territory are very serious and should be dealt with. So far however, we haven’t been given any proof. And Trudeau is clearly using this crisis to… pic.twitter.com/wM2dR8FMHl
— Maxime Bernier (@MaximeBernier) October 17, 2024
இதையடுத்து, 2007ஆம் ஆண்டு அவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
நிஜ்ஜர் ஒரு கனேடியர் அல்ல. இந்த நிர்வாகத் தவறைச் சரிசெய்வதற்காக நாம் மரணத்திற்குப் பின் அவரது குடியுரிமையைப் பறிக்கலாம்.
இப்போது, கனடாவில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான போலி புகலிடக் கோரிக்கையாளர்களைப் போல, அவரது முதல் போலி புகலிடக் கோரிக்கைக்குப் பிறகு அவர் நாடுகடத்தப்பட்டிருக்க வேண்டும்.
பல தசாப்தங்களாக கனடா இந்த வெளிநாட்டினரையும் அவர்களின் பழங்குடி மோதல்களையும் நம் நாட்டிற்குள் வேண்டுமென்றே வரவேற்றதால் இவை அனைத்தும் நடக்கின்றன.
இந்திய – கனடா உறவு
இந்த மிகப்பெரிய தவறை நாம் உணர்ந்து, வளர்ந்து வரும் உலக வல்லரசு மற்றும் ஒரு முக்கியமான கூட்டாளியுமான இந்தியாவுடனான நமது உறவுகளை கெடுத்துக்கொள்வதற்கு பதிலாக, இந்த பிரச்சினையில் தீர்வு காணும் வகையில் இந்திய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் மாக்சிம் பெர்னியர் கூறியுள்ளார்.
இதேவேளை, கனேடியர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனேடிய பிரதமர் வெளிப்படையாக குற்றம் சாட்டியதால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.