கண்டி (Kandy) – தவுலகல பகுதியில் வேனில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறையில் (Ampara) வைத்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த சிறுமி ஒருவரை வேனில் வந்த மர்ம கும்பல் ஒன்று கடந்த 11ஆம் திகதி கடத்திச் சென்றிருந்தது.
இந்த நிலையில் நேற்றையதினம் (12) இது தொடர்பான சீசீடிவி காட்சிகள் வெளியான நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
மேலதிக விசாரணை
இதன் போது, கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய வேன் நேற்றுமுன் தினம் (11.01.2025) பொலன்னறுவை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலன்னறுவை காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்படி, இன்று (12.01.2025) கம்பளை பகுதியில் வைத்து, குறித்த வாகனத்தின் சாரதி தவுலகல காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்றைய தினம் (13.01.2025) காலை அம்பாறை பேருந்து நிலையத்திலிருந்து கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்தபோது குறித்த மாணவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய நபரும் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
https://www.youtube.com/embed/hciO2vTWQJQ