முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சி மாவட்டத்தின் இறுதி காலாண்டுக்கான சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம்

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தின் இறுதி காலாண்டுக்கான சிறுவர் அபிவிருத்திக் குழுக்
கூட்டம் நேற்று (04) நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு
இடம்பெற்றுள்ளது.

இதன்போது, கடந்த காலாண்டு கலந்துரையாடலின் போது இனங்காணப்பட்ட பிரச்சினைகள்
தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள், அவற்றை நடைமுறைப்படுத்தியதன் ஊடாக
ஏற்பட்ட முன்னேற்றங்கள், சிரமங்கள் தொடர்பாகவும் புதிதாக அடையாளப்படுத்தப்பட்ட
பிரச்சினைகள் அவற்றுக்கான தீர்மானங்கள் ஆகியன தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

முக்கிய விடயங்கள் 

மேலும், தற்போதைய சூழ்நிலையில் மாவட்ட ரீதியில் சிறுவர்கள் எதிர்கொள்ளும்
பிரச்சினைகள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் அதீத கவனம்
செலுத்தப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தின் இறுதி காலாண்டுக்கான சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் | Kilinochchi Child Development Committee Meeting

பாடசாலை மாணவர்களின் வரவு ஒழுங்கின்மை, இடைவிலகல் தொடர்பாக ஆராயப்பட்டு
மாணவர்களின் மீளிணைப்பு செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இதனைவிட சட்டவிரோத செயற்பாடுகள், சிறுவர் பாதுகாப்பு,
சிறுவர் தொழில்கள், பால்நிலை சார் வன்முறைகள், துறைசார்ந்து பணியாற்றுகின்ற
அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

மேலும், பாலியல் வன்முறை தொடர்பில் பாதிக்கப்படுகின்ற நபர்களுக்கான உடனடி
உதவிகளை விரைவாக பெற்றுக்கொடுப்பதற்கான சாத்தியமான வழிமுறைகள் ஆராயப்பட்டன.

இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உதவி மாவட்ட செயலாளர், உதவிபிரதேச செயலாளர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், கல்வித் திணைக்கள
அதிகாரிகள் தொழில் திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து
கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் இறுதி காலாண்டுக்கான சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் | Kilinochchi Child Development Committee Meeting

கிளிநொச்சி மாவட்டத்தின் இறுதி காலாண்டுக்கான சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் | Kilinochchi Child Development Committee Meeting

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்