கிளிநொச்சி நாசிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகளில் முஸ்லிம் கலவன் பாடசாலை என பதவி முத்திரையிட்டுள்ளமை யாரை திருப்திபடுத்துவதற்காக என சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனை அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பெயர் மாற்றம்
கிளிநொச்சி நாசிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயரில்
நியமனம் வழங்கப்பட்ட கல்லூரியின் தற்போதைய அதிபர், இம்முறை நடைபெறவுள்ள க.பொ.த
சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகளில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயரை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என பயன்படுத்திக் கையொப்பம் இட்டுள்ளார்.
குறித்த பாடசாலையின் பெயர் ஆரம்பத்தில் தமிழ்க் கலவன் பாடசாலை என்றே
காணப்பட்டுள்ளது. பின்னர் அது முஸ்லிம் கலவன் பாடசாலை என பெயர் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
#கிளிநொச்சி நாச்சிக்குடா #அரசினர் #தமிழ்க் #கலவன் (அ.த.க) பாடசாலை என்ற பெயரில் நியமனம் வழங்கப்பட்ட கல்லூரியின் தற்போதைய #அதிபர், இம்முறை நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அரசினர் தமிழ்க் கலவன் (அ.த.க) பாடசாலை என்ற பெயரில் கிடைக்கப்பெற்றிருந்தும்… pic.twitter.com/8kvSzri4SB
— Kanagaratnam Sugash (@Sugashkanu) April 26, 2024
கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கு புதிய கட்டடம் செந்தில் தொண்டமானால் திறந்து வைப்பு
தமிழரசுக்கட்சியை நீதிமன்றில் நிறுத்தியது மக்களோ அல்லது விரோதிகளோ அல்ல
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |