முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் முன்னறிவிப்பின்றி பிரதேச சபையினர் மேற்கொண்ட நடவடிக்கை.. ஏற்பட்ட கடும் குழப்பநிலை

கிளிநொச்சி கனகபுரம்
பகுதியில் ஆர். டி டி. எல்லைக்கு உட்பட்ட வர்த்தக
நிலையங்களின் முற்பகுதியை, பிரதேச சபையினர் எந்தவித
அறிவித்தலும் இன்றி திடீரென அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

இதன்
காரணமாக அப்பகுதியில் வர்த்தகர்களால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினருக்கு இப்பகுதியில் உள்ள
அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களின் முற்பகுதி அகற்றப்படவுள்ளதாக
தகவல் வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் அப்படி வழங்கப்பட்டிருந்தால்
வர்த்தகர்கள் ஆகிய நாங்கள் அதற்கு அடிபணிவோம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். 

ஊழியர் மீது தாக்குதல்.. 

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பிரதேச சபையின் செயலாளரிடம் வினவிய போது
அவ்வீதியானது ஆர் டி டி எல்லைக்கு உட்பட்ட பகுதியாக காணப்படுவதன் காரணமாகவும்
இப்பகுதியில் உள்ள நடைபாதை வியாபாரிகளை முற்று முழுதாக அகற்றப்பட வேண்டும் என
பிரதேச சபையின் ஊடாக வர்த்தக சங்கத்தினருக்கு கடிதம் மூலம் தகவல்
வழங்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சியில் முன்னறிவிப்பின்றி பிரதேச சபையினர் மேற்கொண்ட நடவடிக்கை.. ஏற்பட்ட கடும் குழப்பநிலை | Kilinochchi Pradeshiya Sabha

அத்துடன், ஒலிபெருக்கி ஊடாகவும் இரண்டு தடவைகள் நடைபாதை
வியாபார இடங்களை அகற்றுமாறு தகவல் வழங்கப்பட்டிருந்த
போதிலும் அதற்கும் அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக
நேற்றைய தினம் (07.08.2025) பிரதேச சபையினர் நடைபாதை வியாபார இடங்களை அகற்றும்
நடவடிக்கையை மேற்கொண்டிருந்த பொழுது அங்கு கூடிய சில வர்த்தகர்களால்
வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பிரதேச சபையின் ஊழியர் ஒருவரையும் தாக்க முட்பட்டதாகவும் இதன் காரணமாக அப்பகுதியில் இருந்து பிரதேச சபையினர்
வெளியேறியதுடன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடு
ஒன்றினையும் பதிவு செய்துள்ளதாக கிளிநொச்சி பிரதேச சபையின் செயலாளர்
தெரிவித்துள்ளார். 

GalleryGalleryGalleryGalleryGallery

நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.