கிளிநொச்சியை (kilinochchi) சேர்ந்த இளைஞன் ஒருவர் பிரான்ஸில் (France) காதலியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், கிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞரின் குடும்பம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரின் சகோதரன் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வருவதால் நான்கு வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டிக்கு புலம் பெயர்த்துள்ளார்.
உயிரிழந்த இளைஞர்
இந்தநிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தரகர் ஊடாக மலையகத்தை சேர்ந்த யுவதியுடன் உயிரிழந்த இளைஞருக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, யுவதியின் தேவைகளை இளைஞர் பூர்த்தி செய்ய சுமார் ஒரு கோடி 80 லட்சம் ரூபா பணத்தை அனுப்பியதுடன் இளைஞன் அனுப்பிய பணத்தில் தனது சகோதரியின் திருமணத்தை குறித்த யுவதி சிறப்பாக செய்து முடித்ததுடன் இந்தியாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றும் வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 23 ஆம் திகதி அன்று இளைஞரும் யுவதியும் தொலைபேசியில் காணொளி அழைப்பில் பேசிக்கொண்டிருக்கையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக யுவதியின் கண்முன் இளைஞர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.