கடந்த வருடம் கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்த தாய் மற்றும் குழுந்தையொன்றின் நினைவாக பேருந்து நிழற்குடை நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த திறப்பு விழா நிகழ்வு நேற்று (25) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த வருடம் (25.12.2024) அன்று கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப்பணிமனை அருகில்
A9 வீதியில் இந்த விபத்து சம்பவத்திருந்தது.
பேருந்து நிழற்குடை
கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் பயணித்த
மோட்டார் சைக்கிளொன்று மது போதையில் தவறாக
செலுத்தப்பட்ட டிப்பர் வாகனத்தில் மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.

விபத்தில் இரண்டு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதையடுத்து, மற்றைய மூவரும் காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட
நிலையில் சிகிச்சை பலனின்றி தாயாரும் உயிரிழந்திருந்தார்.
இந்த விபத்து சம்பவத்தினை நினைவு கூறுவதாக குறித்த பேருந்து தரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
விபத்தின் போது உயிர் தப்பிய மற்றைய சிறுமியினால் பேருந்து நிழற்குடை திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










