முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சுகவீன விடுமுறை போராட்டத்தில் குதித்துள்ள கிண்ணியா நகர சபை ஊழியர்கள்

திருகோணமலை – கிண்ணியா நகரசபை ஊழியர்கள் தங்களுடைய மே மாத சம்பளத்தை உடனடியாக வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஊழியர்கள் இன்று (27.05.2025) சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஊழியர்களின் விசனம்

அரசாங்கத்தின் சுற்றறிக்கைக்கு இணங்க, மே மாதம் 23ஆம் திகதி சம்பளம் வழங்கப்பட வேண்டிய நாளாகும். ஆனால் இன்றைய தினம் (27) வரை சம்பளம் வழங்கப்படவில்லை என இவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Kinniya protest

அத்துடன் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிதான் கடைசியாக நாங்கள் சம்பளம் பெற்றோம். இறுதியாக இன்றுடன் 45 நாட்கள் சென்று விட்டன. இந்த நிலையில், எங்களுடைய வாழ்க்கைச் செலவுகளை எப்படி நாங்கள் சமாளிப்பது? என கேள்வியெழுப்பியுள்ளனர்.

ஒரு ஊழியருக்கு உரிய 80 வீதமான சம்பளத்தைதான் திறைசேரி ஒதுக்கி இருந்தது என்றும் மீதி 20 வீதமானதை உள்ளூராட்சி மன்றங்கள் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

Kinniya protest

போதுமான வருமானம்

இந்த நிலையில், போதுமான வருமானம் கிண்ணியா நகரசபைக்கு இல்லாததன் காரணமாக, சம்பளம் கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டிருப்பதாக நகரசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அலுவலக ஊழியர்கள் கடமைக்குச் செல்லாததன் காரணமாக, நகரசபை அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டதோடு, சேவையை நாடி வந்த பொதுமக்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்