யாழ். பருத்தித்துறை – கீரிமலையிலிருந்து கொழும்பிற்க்கு முன்னெடுக்கப்பட்ட பேருந்து சேவையானது மீண்டும் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2020 ஆண்டுமுதல் குறித்த சேவையானது பேருந்து இன்மை, மற்றும் சாரதிகள் இன்மை
போன்ற காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாளை பிற்பகல் 7:15 மணிக்கு
கீரிமலையிலிருந்து காங்கேசன்துறை, தொண்டமனாறு, வல்வெட்டித்துறை
ஊடாக பருத்தித்துறையை வந்தடைந்து பருத்தித்துறையிலிருந்து மந்திகை மாலிசந்தி
நெல்லியடி துன்னாலை ஊடாக வவுனியா அனுராதபுரம் புத்தளம் சிலாபம் வழியாக
கொழும்பை சென்றடையவுள்ளதாக கூறப்படுகிறது.
பேருந்து பற்றாக்குறை
இதேவேளை பருத்தித்துறையிலிருந்து அம்பன் மருதங்கேணி ஊடாக
கொழும்புக்கான பேருந்து சேவைகள் நடத்தப்பட்டிருந்தது.
அச்சேவைகள் ஏன் இடை
நிறுத்தப்பட்டிருந்தது? எப்போது மீள ஆரம்பிக்கப்படும்? என சாலை முகாமையாளரை
கேட்டபோது சாரதி, மற்றும் பேருந்துகள் பற்றாக்குறை காரணமாக அச் சேவைகள் தொடர
முடியாதுள்ளதாக தெரிவித்துள்ளார்.