முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நுவரெலியாவில் மாபெரும் வினோத காற்றாடி திருவிழா

நுவரெலியாவில் முதல் முறையாக மாநகர சபை ஏற்பாட்டில் விசித்திர காற்றாடி
திருவிழா ஆரம்பமாகியுள்ளது.

குறித்த நிகழ்வானது நுவரெலியா, கிரகரி வாவியின் கரையோரத்தில் நேற்றையதினம்(17) முதல் இன்றையதினம்(18) வரை வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

இந்த காற்றாடி போட்டியில் 200 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இணைந்து கொண்டு பலவிதமான வண்ணங்களில் விசித்திர காற்றாடிகளை செய்து அதனை காட்சிப்படுத்தி பல வானில் பறக்கவிட்டுள்ளனர்.

வண்ணமய ராட்சத காத்தாடிகள்

இதன்போது, அழகிய வண்ணங்களில் நுணுக்கமான வடிவமைப்புகளுடன் அமைக்கப்பட்டிருந்த மீன்கள்,
பறவைகள், நட்சத்திரங்கள் போன்ற விசித்திரமான ராட்சத காற்றாடிகள் காண்போரை
வியக்க வைத்துள்ளது.

நுவரெலியாவில் மாபெரும் வினோத காற்றாடி திருவிழா | Kite Festival In Nuwara Eliya

பல்வேறு உருவங்களில் வானில் பறக்கவிடப்பட்ட காற்றாடிகளை
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கண்டு ரசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நுவரெலியாவில் முதல் முறையாக காற்றாடி திருவிழா நடைபெற்றமையால் மக்கள்
மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

நுவரெலியாவில் மாபெரும் வினோத காற்றாடி திருவிழா | Kite Festival In Nuwara Eliya

அத்துடன் இரண்டு நாட்கள் இடம்பெறும் இந்த நிகழ்வில் விசேட கலாச்சார விளையாட்டு போட்டிகள்
மற்றும் களியாட்ட நிகழ்வுகள் நடைபெற்றுவருவதுடன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக தற்போது அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு
விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையால் கூடுதலான பார்வையாளர்கள் வருகைத்தந்தமை
குறிப்பிடத்தக்கது. 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

Source: https://tamilwin.com/article/kite-festival-in-nuwara-eliya-1723974823

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்