முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பாக முற்றுமுழுதான அறிக்கை சமர்ப்பிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவு பெற்ற பின்னர்
அது தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக
இடம்பெற்று வருகிறது.

அந்தவகையில் இன்றையதினம் (29.05.2025) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில்
நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட
நிலையில் குறித்த வழக்கில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி
க.வாசுதேவா மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சார்பான
சட்டத்தரணி எஸ்.நிறஞ்சன், காணாமல் போனோர் அலுவலகம் சார்பான சட்டத்தரணிகள்
ஆகியோர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பாக முற்றுமுழுதான அறிக்கை சமர்ப்பிப்பு | Kokkuttoduwai Human Grave Report Submission

மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியின் கருத்து

இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து
தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா, கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணி தாெடர்பான வழக்கு இன்று
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது
சட்டவைத்திய அதிகாரி குழுவினரால் தயாரிக்கப்பட்ட முற்றுமுழுதான அறிக்கை
சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

முக்கியமாக இந்த அறிக்கையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் 52இன்
வயது, பாலினம், இறப்புக்கான காரணம் என முக்கிய விபரங்கள் அடங்கிய அறிக்கை
சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பாக முற்றுமுழுதான அறிக்கை சமர்ப்பிப்பு | Kokkuttoduwai Human Grave Report Submission

இங்கே நீதிமன்ற நடவடிக்கையின்போது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர்
இறந்தவர்கள் யார் என அடையாளம் காணப்படாத நிலையில் அவர்களை மேலும் அடையாளம்
காணும் முகமாக நீதவானால் காணாமலாக்கப்பட்டோர் சங்கப்பிரதிநிகள்,
காணமலாக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு அவர்களை கண்டறிய உதவுமாறு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.

இறப்புக்கான காரணங்களாக குண்டுவெடிப்பு, சூட்டுக்காயங்கள் இருந்தது. சில
எலும்புக்கூடுகளில் சில பகுதிகளே இருந்தமையால் மரணத்துக்கான காரணம்
கண்டறியப்படவில்லை. இவ் வழக்கானது அடுத்த தவணைக்காக ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

சட்டத்தரணியின் தகவல்

குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின்
சார்பான சட்டத்தரணி எஸ்.நிறஞ்சன் கருத்து தெரிவிக்கையில், கொக்குதொடுவாய் மனித புதகுழி வழக்கு இன்றையதினம் எடுத்துக் கொள்ளப்பட்ட போது
ஏற்கனவே சட்ட வைத்திய அதிகாரிகளினால் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட இருந்தது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பாக முற்றுமுழுதான அறிக்கை சமர்ப்பிப்பு | Kokkuttoduwai Human Grave Report Submission

இன்று சட்ட வைத்திய அதிகாரியின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில்
இறந்த மண்டை ஓட்டு தொகுதிகளில் எத்தனை ஆண்கள்? எத்தனை பெண்கள்? இறப்புக்கான
காரணங்கள் போன்ற விவரங்களும் சம்பவத்திற்கான விடய தானங்கள் தொடர்பாக
சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த இறுதி அறிக்கைகளை அடுத்து காணவனமால் போனோர் அலுவலகத்தின் இந்த இறுதி
அறிக்கைகள் காணப்படுகின்ற இலக்கங்கள், அதாவது தமிழீழ விடுதலை புலிகளுடைய
இலக்கமான கருதப்படும் இலக்கங்களை பத்திரிகைகளில் பிரசுரிக்க இருக்கிறார்கள்.

அந்த பிரசுரத்தின் பிற்பாடு இது தொடர்பான , தொடர்புடைய மக்கள்
நீதிமன்றத்திற்கு வந்து நீதிமன்ற பதிவாளரிடம் இது சம்பந்தமாக தெரிவிக்கும்
போது மேற்கொண்டு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக தீர்மானம்
எடுக்கப்பட இருக்கின்றது.

ஆகவே இந்த இறுதி அறிக்கையை வைத்துக்கொண்டு காணாமல் போனோர் அலுவலகம் பத்திரிகை
பிரசுரத்தின் பிற்பாடு இது தொடர்பான முடிவுகளை எடுக்க இருக்கிறது என
தெரிவித்தார். 

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பாக முற்றுமுழுதான அறிக்கை சமர்ப்பிப்பு | Kokkuttoduwai Human Grave Report Submission

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பாக முற்றுமுழுதான அறிக்கை சமர்ப்பிப்பு | Kokkuttoduwai Human Grave Report Submission

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பாக முற்றுமுழுதான அறிக்கை சமர்ப்பிப்பு | Kokkuttoduwai Human Grave Report Submission

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பாக முற்றுமுழுதான அறிக்கை சமர்ப்பிப்பு | Kokkuttoduwai Human Grave Report Submission

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்