கொஸ்லந்தை பகுதியில் மிக முக்கியமாக காணப்படும் காட்டு யானை பிரச்சினை, வீதி பிரச்சினை, போக்குவரத்து சற்றும் இல்லாத பிரச்சினை, மக்களுக்கான வீடமைப்பு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக ஊவா மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கொஸ்லந்தை மீரியபெத்தை பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள திருவள்ளுவர் நன்னெறிக்கழக அறநெறிப்பாடசாலையின் வருடாந்த தைப்பொங்கல் நிகழ்வானது நேற்றையதினம்(9) இடம்பெற்றுள்ளது.
ஆளுநரின் கவனத்திற்கு
இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக ஊவா மாகாண ஆளுநர் K.j.M கபில ஜயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான கிட்ணன் செல்வராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.
இதன்போதே இந்த பிரச்சினைகள் தொடர்பில் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இவை தொடர்பான முழுவிபரங்கள் தொடர்பில் அறநெறிப்பாடசாலையின் பொறுப்பாளர் கவியரசனால் ஆளுநருக்கு மனுவொன்றும் கையளிக்ககப்பட்டுள்ளது.