மருந்துப் பொருட்களின் தரத்தைப் பரிசோதிக்கும் வகையிலான உயர்தர ஆய்வகங்களை இலங்கையில் நிறுவ சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
பல்வேறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்களை பரிசோதிக்க பல ஆய்வகங்களை எதிர்காலத்தில் நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
பரிசோதனை ஆய்வுகூட வசதிகளை நிறுவ
அவ்வாறான பரிசோதனைகள் சுகாதாரக் கண்காணிப்பின் பல்வேறு கட்டங்களில் செய்யப்பட வேண்டும்.
ஆனால் இதுவரை காலமும் ஏதேனும் ஒரு மருந்துப் பொருள் குறித்து புகார் இருந்தால் மட்டுமே அவற்றைப் பரிசோதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன் காரணமாக தற்போது அரசாங்கம் இலங்கையில் ஒன்று அல்லது இரண்டு பரிசோதனை ஆய்வுகூட வசதிகளை நிறுவுவதில் கவனம் செலுத்தியுள்ளது.