புதிய இணைப்பு
நாயன்மார்களால் பாடல் பெற்ற தளங்களில் ஒன்றான வரலாற்றுப் புகழ்பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்று வருகின்றது.
பூசை வழிபாடுகளில் உலகம் முழுவதும் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திகடன்களை செலுத்தி வருவதுடன் வழிபாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
விசேட அதிரடிபடையினரின் பாதுகாப்பு
இலங்கை (Srilanka) மாத்திரம் இன்றி உலகம் முழுவதும் இருந்து வருகை தந்த சிவ பக்தர்கள்
மன்னார் (Mannar) பாலாவியில் நீராடி பாலாவி தீர்த்த நீரை திருக்கேதீஸ்வர ஆலயத்தினுள்
உள்ள மகா சிவலிங்கத்திற்கு நீர்வார்த்து நெய் விளக்கு ஏற்றி வேண்டுதல்கள்
மற்றும் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
அத்துடன் சிவராத்திரி நிகழ்வுகளை முன்னிட்டு திருக்கேதீஸ்வர திருப்பணி
சபையின் ஏற்பாட்டில் பல்வேறுபட்ட இந்து கலாச்சார நிகழ்வுகள் அறநெறி சொற்பொழிவு
நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், இம்முறை சிவராத்திரி நிகழ்வுக்கு என விசேட காவல்துறை, இராணுவ
அதிரடிபடையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து சுமார் எட்டு இலட்சத்துக்கும் அதிகமான
பக்தர்கள்
சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
செய்திகள் – ஜோசப் நயன்
முதலாம் இணைப்பு
ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகப் போற்றப்படும் கீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வர சுவாமி ஆலயத்தில் நேற்று (26.02.2025) மகா சிவராத்திரி உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது.
பூசை வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திகடன்களை செலுத்தியதுடன் வழிபாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
you may like this..
You May like this
https://www.youtube.com/embed/maTFVFB-ut4https://www.youtube.com/embed/mh09uOcs0d4