முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் தனியார் காணி ஒன்றை கைப்பற்றும் கடற்படையினரின் நடவடிக்கையை தடுத்த பொதுமக்கள்

யாழ்ப்பாணம் (Jaffna) – மண்டைதீவு பெரியகுளம், கலங்கரைவிளக்க கடற்படை முகாமை
விஸ்தரிப்பதற்காக தனியார் காணி ஒன்றை அளவீடு செய்யும் நடவடிக்கையை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். 

அண்மையில், கடற்கரையை அண்மித்த தனியார் காணியை அளவீடு செய்வதற்காக நில அளவை திணைக்கள அதிகாரிகள்
குறித்த இடத்திற்கு வருகை தந்தபோது, காணி
உரிமையாளருடன் இடத்திற்கு வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் உள்ளிட்டோர் அந்நடவடிக்கையை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

காணி உரிமையாளருக்கு ஆதரவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்
செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் அங்கு பிரசன்னமாகியிருந்ததோடு,
காணியை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளிடம், தொடர்ந்து பலனளிக்காத இந்த முயற்சியை
கைவிடுமாறு குறிப்பிட்டுள்ளனர். 

உரிமையாளரின் அனுமதி 

நில அளவைத் திணைக்களமும், பிரதேச செயலகமும், பொதுமக்களும்,
உரிமையாளரும் விரும்பாத காணி அளவீட்டுக்காக எத்தனையோ முயற்சிகள் எடுத்தும்
அது கைகூடாத நிலையில், காணி அளவீட்டை மேற்கொள்ளும் செற்பாட்டை கைவிடுவது
பொருத்தமான செயல் என அரசாங்கத்திற்கு அறிவிக்க வேண்டுமென நாங்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர். 

யாழில் தனியார் காணி ஒன்றை கைப்பற்றும் கடற்படையினரின் நடவடிக்கையை தடுத்த பொதுமக்கள் | Land Issue Jaffna People Stoped Navy S Activities

பொதுநலனுக்காக என்றாலும், உரிமையாளரின் அனுமதி இன்றி மேற்கொள்ளப்படும் காணி
அளவீடு சட்டவிரோதமான செயல் என சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

உரிமையாளர் விரும்பாத இடத்தில் பொது நலனுக்காக காணியை அளவீடு செய்வது
சட்டத்திற்கு முரணான செயல். இது, பொது நலனுக்காக எடுக்கப்படலாம், ஆனால்
உரிமையாளரும், பொது மக்களும் எதிர்ப்பது பொது நலனாக இருக்க முடியாது.”

தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணிகளை கடற்படையினருக்காக
கையகப்படுத்துவதற்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ள
நிலையில், புதிய ஜனாதிபதியின் கீழும் எவ்வித மாற்றமும் இன்றி இந்த முயற்சி
தொடர்வதாக வடமாகாண ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். 

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.