Courtesy: எம்.என்.எம்.புஹாரி
திருகோணமலை (Trincomalee) கடற்கரையில் பெருமளவான சிகப்பு நிறத்திலான நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக இவ் சிவப்புநிற நண்டுகள் கரையொதுங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கரையொதுங்குவதற்கான காரணம்
திருகோணமலை உட்துறைமுகவீதி கடற்கரையில், பெருமளவான நண்டுகள் இறந்த நிலையிலும் சில நண்டுகள் உயிருடனும் கரை ஒதுங்கி வருகின்றன.

இவ்வாறு நண்டுகள் கரையொதுங்குவதற்கான காரணம் தெரியாதென கடற்றொழிலாளர்களும்,
பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் பல்வேறு பாகங்களிலும் அண்மைக்காலமாக இவ்வாறு சிவப்பு நிற நண்டுகள்
கரையது வருகின்ற மையம் குறிப்பிடத்தக்கது.

