முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மந்துவில் பகுதியில் தோட்டக்காணியில் மலைப்பாம்பு ஒன்று எதனையோ விழுங்கிய நிலையில் பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றையதினம்(22.10.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
அப்பகுதியில் உள்ள தோட்டக்காணியினை அதன் உரிமையாளர் துப்பரவு செய்து
கொண்டிருந்தபோது, பாம்பு ஒன்று எதனையோ விழுங்கிய நிலையில் அசைய முடியாது
தடுமாறிக் கிடந்துள்ளது.
அதிகாரிகள் எச்சரிக்கை
இதனை அவதானித்த உரிமையாளர் உடனடியாக முல்லைத்தீவு வனஜீவராசிகள் திணைக்கள
அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதையடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து
பாம்பினை பாதுகாப்பாக மீட்டு வேறு பகுதியில் விடுவித்துள்ளனர்.

தற்போது மழைக்காலம் நிலவி வரும் நிலையில், பாம்புகள் அடிக்கடி வெளிப்புற பகுதிகளுக்கு
வரக்கூடிய வாய்ப்பு உள்ளதால், மக்கள் தங்கள் வீடுகளிலும் தோட்டங்களிலும்
அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


