இலங்கையின் பிரபலமான முன்னாள் வேகப்பந்து வீரர் லசித் மலிங்கா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தனது முகப்புத்தகப் பதிவில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
முகப்புத்தக பதிவு
அந்த பதிவில் மேலும்,
2009இல் மீண்டும் விளையாட்டுத் துறைக்குத் திரும்புவதற்கு நீங்கள் எனக்கு உற்சாகம் அளித்தீர்கள்,
அதனால் மேலும் பதினொரு ஆண்டுகள் நாட்டுக்கு வெற்றிகளைக் கொண்டு வர முடிந்தது.
எப்படியும், எப்போதும், மஹிந்த ராஜபக்சவே! என குறிப்பிட்டுள்ளார்.