அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமில்லாத விடுமுறையை ஓய்வூதியம் பாதிக்காத வகையில் வழங்குவது தொடர்பாக அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் விசேட அறிவித்தல் விடுத்துள்ளது.
அந்தந்த விடுமுறையை அங்கீகரிப்பதில் மாவட்டச் செயலாளர்கள் பின்பற்ற வேண்டிய தொடர் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜூன் 22, 2022 திகதியிட்டு வெளியிடப்பட்டுள்ள அரச நிர்வாக சுற்றறிக்கையின்படி, ஊதியம் இல்லாத விடுப்பு வழங்குவதில் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக தொடர் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
விடுமுறை விண்ணப்பம்
அரச உத்தியோகத்தர்கள் சிலர் 05 வருடங்கள் உள்ளூர் விடுப்பு எடுத்து விடுமுறையை இரத்து செய்யாமல் வெளிநாட்டு விடுமுறைக்கு விண்ணப்பித்த சம்பவங்களும் பதிவாகியுள்ள நிலையில் விடுமுறையை அங்கீகரிக்கும் முன்னர் இது தொடர்பில் பரிசீலிக்குமாறு பொது நிர்வாக அமைச்சு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வெளிநாட்டு விடுப்பு விண்ணப்பங்களை அனுப்பும் போது, உத்தியோகத்தர்கள் முன்னர் எடுக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைகளை சரிபார்த்து, அட்டையில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.