நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமது தேர்தல் பிரசார வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய அரியநேத்திரன் (ariyanethiran) உட்பட மூவருக்கு எதிராக சட்ட சடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
மூன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தல் பிரசார வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாக தேர்தல் ஆணையம் (EC) அறிவித்துள்ளது.
அரியநேத்திரன் உட்பட மூவர்
இதன்படி வண. பத்தரமுல்லே சீலரதன தேரர் (Ven. Battaramulle Seelarathana), சரத் கீர்த்திரத்ன (Sarath Keerthiratne), மற்றும் பி.அரியநேத்திரன் ஆகியோரே அந்த மூன்று வேட்பாளர்களுமாவர்.
இந்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அத்தகைய குற்றத்திற்கான அபராதம் ரூ. 100,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு வரை கால அவகாசம்
ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது பிரசார நிதி அறிக்கைகளை சமர்ப்பிக்க நேற்று (13) நள்ளிரவு வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பி. அரியநேத்திரன் சங்கு சின்னத்தில் பொதுவேட்பாளராக போட்டியிட்டிருந்தார்.