இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூருவது அவர்களது உறவினர்களின் தலையாய கடமை என தற்போது பிரித்தானியாவின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த மே மாதம் அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் பேரவலம்
இலங்கையின் இறுதிக்கட்ட போரில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டதுடன் இதுவொரு பரந்துபட்ட மனித உரிமை மீறலாகும்.
இவ்வாறு இவர்கள் கொடூரமாக கொன்றொழிக்கப்பட்டமை அவர்களது உறவினர்கள் மிகுந்த வலி மற்றும் வேதனையுடனேயே வாழ வழி வகுத்துள்ளது.
தமிழ் மக்களுடன் நிற்கும்
இந்த நினைவு தினத்தில் தொழிலாளர் கட்சி அதற்கான மரியாதையை வழங்குவதுடன் கடைசி சமாதானம் கிடைக்கும் வரையிலும் நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு ஏற்படும் வரையிலும் தமிழ் மக்களுடன் நிற்கும் என அவர் தெரிவித்துள்ளார்.