புதிய இணைப்பு
லிட்ரோ எரிவாயுவை தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு விலையை குறைத்துள்ளது.
இதற்கமைய, 12.5 கிலோ சிலிண்டரின் விலை ரூ.275 குறைக்கப்பட்டு புதிய விலை ரூ.3,840 என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 5 கிலோ சிலிண்டரின் விலை ரூ.110 குறைக்கப்பட்டு புதிய விலை ரூ.1,542 என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இன்று (மே 03) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
அதன்படி, 4,115 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,940 ரூபாவாகும்.
லிட்ரோ எரிவாயு
இதேவேளை, அத்துடன் 5 கிலோகிராம் நிறைகொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டருக்கு ரூ.70 குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.1,582 ஆக உள்ளது.
மேலும் 2.3 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சிலிண்டரின் விலை ரூ.32 குறைக்கப்பட்டு அதன் புதிய விலை ரூ.740 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எரிவாயு விலைக்கட்டணம் குறித்து லாப் சமையல் எரிவாயு நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை முதல் எரிவாயு விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
பாடசாலை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!
ஏப்ரலில் அதிகரித்த இலங்கையின் பணவீக்கம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |