நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட,
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சிறப்பு ஏற்பாடுகள் யோசனையை விவாதிக்க தேர்தல்
ஆணையகம் இன்று (18) காலை கூடியுள்ளது.
இருப்பினும், யோசனை நிறைவேற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ வர்த்தமானி
அறிவிப்பு இன்னும் ஆணையகத்த்துக்கு கிடைக்கவில்லை என்பதால் முடிவு எதுவும்
எடுக்கப்படவில்லை.
இன்று பெரும்பாலும், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
அமைச்சகத்தால் தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள்
தேர்தல் ஆணையகம், இந்த வர்த்தமானி அறிவிப்பைப் பெற்றவுடன், உள்ளூராட்சி
மன்றத் தேர்தலுக்கான திகதியை அது தீர்மானிக்கும்.
இதற்கிடையில், நேற்று நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சிறப்பு
ஏற்பாடுகள் சட்டத்தை தாம் அங்கீகரித்ததாக நாடாளுமன்ற சபாநாயகர் இன்று சபையில்
அறிவித்துள்ளார்.