தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும்
இடையிலான சந்திப்பு ஒன்று இன்று(01) இரவு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
உள்ளூராட்சி தேர்தலில் கட்சிகள் பெற்றுக் கொண்ட ஆசனங்களை கொண்டு சபைகளில்
ஆட்சி அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நாடாளுமன்ற
உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இல்லத்தில் இடம்பெற்றது.
சந்திப்பு
இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன் ஆகியோருடன்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் இணைத் தலைவர்களான சுரேஷ்
பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்டோர் கலந்துரையாடினர்.
https://www.youtube.com/embed/S2WxztRTiik

