முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நகர்ப்புறங்களில் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் தாழ்தளப் பேருந்துகள்

நகர்ப்புறங்களில் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் போக்குவரத்து,
நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு 100
தாழ்தளப் பேருந்துகளை ( Low -floor) கொள்வனவு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

அமைச்சின் கூற்றுப்படி, பேருந்துகள் வசதியானவை, நவீனமானவை என்பதுடன் முக்கிய
நகரங்களில் திறமையான பொதுப்போக்குவரத்து சேவைகளுக்கான வளர்ந்து வரும்
தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து நெரிசல் 

இந்தத் திட்டம், குறிப்பாக முதியவர்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கு
அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நகர்ப்புறங்களில் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் தாழ்தளப் பேருந்துகள் | Low Floor Buses Passenger Transport In Urban Areas

அதே நேரத்தில் பொதுப் போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன்
மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏலங்களுக்கான அதிகாரப்பூர்வ அழைப்பு (IFB) வெளியிடப்பட்டுள்ளதுடன் ஆர்வமுள்ள
தரப்பினர் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

கொள்முதல் செயல்முறை பத்தரமுல்லையில் உள்ள செத்சிரிபாய நிலை IIஇல் அமைந்துள்ள
அமைச்சின் கொள்முதல் பிரிவு மூலம் கையாளப்படும்.

மேலதிக விபரங்கள் அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் (
http://www.transport.gov.lk) அல்லது 0112-187213 என்ற தொலைபேசி மற்றும்
தொலைநகல் மூலம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்