கொழும்புத் துறைமுகத்தில் மசகு எண்ணெய்யை இறக்கிக் கொண்டிருந்த கப்பல் ஒன்றின் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் கடல் நீரில் எரிபொருள் கலந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் எண்ணெய் கசிவை கட்டுப்படுத்தவும் சுத்தம் செய்யவும் உடனடியாக நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
குறித்த பணிகளில் இலங்கை கடலோர பாதுகாப்புப் படை மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை என்பன இணைந்து ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

