புதிய இணைப்பு
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது சாலி நளீம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
நேற்று (14) நாடாளுமன்றத்தில் பேசிய நளீம், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏறாவூர் நகரசபைக்கு போட்டியிடுவதற்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக குறிப்பிட்டார்.
கடந்த வருடம் டிசம்பர் 3 ஆம் திகதி சபாநாயகர் முன்னிலையில் முஹம்மது சாலி நளீம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
இதற்கு முன்னர் ஏறாவூர் நகரசபைத் தலைவராகவும் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது சாலி நளீம் (Mohamed Sali Naleem) பதவி விலகியுள்ளார்.
சிறிலங்க முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாளுமன்ற உறுப்பினராக ஏறாவூர் சாலி நளீம் நியமிக்கப்பட்டிருந்தார்.
குறித்த கட்சிக்கு தேசியப் பட்டியலில் ஒரு ஆசனம் கிடைத்திருந்த நிலையில் குறித்த ஆசனத்திற்கு அவர் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாவது பதவி விலகல்
இந்த நிலையில், அவரது பதவி விலகலானது, 2025 ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற பதவி விலகளாக பதிவாகியுள்ளது.