யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் வாரத்தின் மூன்றாம் நாள் நினைவஞ்சலி இடம்பெற்றது.
மாவீரர்
ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் இன்று (24) நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்த நினைவஞ்சலி நிகழ்வில் மாவீரர்களின்
பெற்றோர்கள், உறுவினர்கள் என பலரும் கலந்துகொண்டு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி
செலுத்தினர்.
உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம்
இதேவேளை உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் ஏற்பாட்டுக்குழுவுக்கும் அரசியல் கட்சி
ஒன்றிற்கும் இன்று காலை முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாவீரர் நினைவேந்தல் வாரம் நேற்று முன்தினம் (21) தமிழர் தாயகமெங்கும் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


