14 வயது மாணவன் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்ட ஆசிரியரை டிசம்பர் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மொரட்டுவ நீதவான் இன்று (18) உத்தரவிட்டார்.
சம்பவத்தை மறைத்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அதிபரையும் இரண்டு லட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
காவல்துறையினரால் கைது
மொரட்டுவ காவல் பிரிவில் உள்ள ஒரு பிரபல பாடசாலையின் ஆசிரியரும் அதன் அதிபரும் சமீபத்தில் 14 வயது மாணவன் ஒருவரை துஷ்பிரயோகம் செய்து சம்பவத்தை மறைத்ததாகக் கூறி மொரட்டுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பதுரலிய மற்றும் பிலியந்தலையைச் சேர்ந்த 58 மற்றும் 59 வயதுடைய இருவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
போக்குவரத்து கட்டுப்பாட்டுக்குப் பொறுப்பான ஆசிரியர்
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆசிரியர் பள்ளி போக்குவரத்து கட்டுப்பாட்டுக்குப் பொறுப்பான ஆசிரியர் என்றும், அவருக்கு எதிராக வேறு முறைப்பாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


