தெற்காசிய உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் இலங்கை 20
வயதுப் பெண்கள் தேசிய அணியில் மகாஜனக் கல்லூரி வீராங்கனைகள் மூவர்
இடம்பிடித்துள்ளனர்.
குறித்த போட்டியில் J.லயன்சிகா, T.சஸ்மி, S.கம்சியா ஆகிய வீராங்கனைகளே பங்கேற்க உள்ளனர்.
இந்தப் போட்டி பங்களாதேஸில் ஜூலை 11 தொடக்கம் 21 வரை நடைபெறவுள்ளது.
பாராட்டு
இந்த வீராங்கனைகளை பலரும் வாழ்த்திப் பாராட்டுவதோடு, இந்த வீராங்கனைகளை தேசிய
அணியில் இடம்பிடிக்கும் வகையில் சிறப்பான பயிற்சிகளை வழங்கிய பாடசாலைப்
பயிற்றுநர் திரு.சி.சாந்தகுமாருக்கு பாடசாலை சமூகத்தினர் நன்றிகளை
தெரிவிக்கின்றனர்.





