உலகளாவிய ரீதியில் இன்றைய தினம் மஹா சிவராத்திரி விரதம் அனைவராலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
சிவராத்திரி விரதம், சிவன் மற்றும் பார்வதியின் திருமணத்தையும் , சிவன் தனது தெய்வீக நடனமான தாண்டவத்தை நிகழ்த்தும் சந்தர்ப்பத்தையும் நினைவுகூரும் வகையில் அமைந்துள்ளது.
மாதந்தோறும் சிவராத்திரி உண்டு என்றாலும் மாசி மாதத்தில் வருவதே மஹா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது. இன்றைய தினம் சனிக்கிழமை. சனி மகாபிரதோஷமும் மகா சிவராத்திரி நாளும் இணைந்து வருவது இன்னும் கூடுதல் சிறப்பு.
எனவே, இந்நன்னாளை சிறப்பிக்கும் வகையில், இலங்கையில் அனைத்து சிவாலயங்களிலும் பூஜை புனஸ்காரங்கள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில், இன்று இலங்கையில் இந்து மதத்தின் அடையாளமாக திகழும் சில முக்கிய சிவாலயங்களில் இடம்பெறும் பூஜை நிகழ்வுகள் லங்காசிறியின் நேரலையில் ஒளிபரப்பாகின்றன..