ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) அவசர அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று மாலை ஒரு முக்கிய கலந்துரையாடலில் ஈடுபடுவதற்காகவே குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விசேட கலந்துரையாடல்
குறித்த கூட்டமானது, விஜேராமவில் உள்ள மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து முன்னர் விலகி, வேறு கட்சிகளில் இணைந்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களும் இன்றிரவு மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் அதேவேளை, அங்கு ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற உள்ளது.