முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகிந்தவின் மகன் யோஷிதவுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) மகன் யோஷித ராஜபக்ச (Yoshitha Rajapaksa) மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணை ஒக்டோபர் 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (04) காலை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி முதல் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில், சட்டவிரோதமாக சம்பாதித்ததாக கூறப்படும் 59 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை 3 வங்கி கணக்குகளில் வைப்புச் செய்துள்ளதாக யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்றில் முன்னிலை 

குறித்த வழக்கு இன்றையதினம் அழைக்கப்பட்ட போது யோஷித ராஜபக்சவும் டெய்சி பாட்டியும் (Daisy Forest) நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

மகிந்தவின் மகன் யோஷிதவுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு | Mahinda S Son Yoshitha And His Grandmother Case

ஆனால், இந்த வழக்கை விசாரணை செய்யும் கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன விடுமுறையில் உள்ளதால் வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்