முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாலினி பொன்சேகாவின் அஞ்சலி நிகழ்வில் இடம்பெற்ற முகம் சுழிக்க வைக்கும் சம்பவம்

இலங்கையின் பிரபல நடிகை மாலினி பொன்சேகா உயிரிழந்துள்ள நிலையில் நாட்டுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த சக நடிகை ஒருவரின்  செயற்பாடு பலரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.  

மாலினி பொன்சேகாவின் பூதவுடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் வைக்கப்பட்டது.

புகைப்படங்கள்

இதன்போது, அதிகளவான இரசிகர்கள், திரைப்பட துறையினர் என பலர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் குறித்த நடிகை படத்தில் நடிப்பதை போன்று பூதவுடலுக்கு அருகில் சென்று முகம் சுழிக்க வைக்கும் முறையில் நடந்து கொண்டுள்ளார்.

மாலினி பொன்சேகாவின் அஞ்சலி நிகழ்வில் இடம்பெற்ற முகம் சுழிக்க வைக்கும் சம்பவம் | Malini Body Funeral

வழமையாக எவராக இருந்தாலும் இறுதிக் கிரியைகளுக்கு சென்றால் அனுதாபங்களை தெரிவிப்பார்கள்.ஆனால் குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை, மறைந்த மாலினி பொன்சேகாவின் பூதவுடலுக்கு அருகில் சென்று புகைப்படங்கள் எடுத்து இழிவான முறையில் நடந்து கொண்டுள்ளார்.

அத்தோடு, மாலினி பொன்சேகாவின் பூதவுடன் வைக்கப்பட்டிருந்த இடத்தில் மற்றுமொருவரை நிறுத்தி அவரிடம் சைகை காட்டி தன்னைப் புகைப்படம் மற்றும் காணொளிகளை எடுக்குமாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும், அருகில் இருந்து அஞ்சலி செலுத்தியவர்களை பின்னே செல்லுமாறு கூறி தன்னைப் புகைப்படம் எடுக்குமாறு தனக்கு முன்னால் இருந்தவரை பணித்துள்ளார்.

மாலினி பொன்சேகா

இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், பலர் குறித்த நடிகையின் இந்த செயற்பாட்டிற்கு கடும் விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மாலினி பொன்சேகாவின் அஞ்சலி நிகழ்வில் இடம்பெற்ற முகம் சுழிக்க வைக்கும் சம்பவம் | Malini Body Funeral

இலங்கை சினிமாவின் ராணி என்று போற்றப்படும் மாலினி பொன்சேகா கடந்த (24) ஆம் திகதி தனது 78 ஆவது வயதில் காலமானார்.

அத்தோடு, 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டார்.

பைலட் பிரேமநாத் என்ற இந்திய- இலங்கை கூட்டுத் திரைப்படத்தில் அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் கதாநாயகியாக நடித்ததன் மூலம், தமிழ் இரசிகர்களிடையே அவர் பேசப்படும் ஒருவரானார்.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.