கட்டுநாயக்கவில் ரூ.100 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள புதிய நவீன கையடக்க தொலைபேசிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு இன்று (04) வந்த சந்தேக நபரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதன்போது, பல மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஹோட்டல்களில் பணிபுரிந்த வந்த மட்டக்களப்பு காத்தான்குடியில் வசிக்கும் 32 வயதான நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
528 தொலைபேசிகள்
இதேவேளை, சந்தேகநபர் அடிக்கடி இலங்கைக்குள் பொருட்களை கடத்தும் நபர் என சுங்க அதிகாரிகள் அடையாளம் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சந்தேக நபர் இன்று அதிகாலை 528 தொலைபேசிகளுடன் கூடிய மூன்று பைகளுடன் துபாயில் இருந்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

