கட்டுநாயக்க விமான நிலையத்தில் 52 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று (05.03.2025) அதிகாலை 01.00 மணிக்கு தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து வருகைத்தந்துள்ளார்.
52 மில்லியன்
குறித்த சந்தேக நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் நிறை சுமார் 05 கிலோ கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தனது பயணப்பொதியில் இருந்த உணவுப் பைகளில் போதைப்பொருளை மறைத்து வைத்துள்ள நிலையில், பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.
இந்நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.