யாழ். வடமராட்சி கிழக்கு மாமுனையில் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு(18) 10 மணியளவில் விசேட அதிரடிப் படையினர் மாமுனை கிராமத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 7.5 கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபரை சிறப்பு அதிரடி படையினர் மருதங்கேணி
பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரை கிளிநொச்சி நீதிவான்
நீதிமன்றத்தில் இன்றைய தினம்(19) முன்னிலைப்படுத்திய போது அவரை
தடுப்புக் காவலில் வைத்து மேலதிக விசாரணைகள்
மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

