முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் கால்நடைகளை திருட முயன்ற கும்பல்! பொதுமக்களால் மடக்கி பிடிப்பு

 யாழ்ப்பாணம்- வேலணை பிரதேசத்தில் கால்நடைகளை திருடி இறைச்சியாக்கி விற்பனை செய்து வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(12) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞன் ஒருவரே பொதுமக்களால் பிடிக்கப்பட்டு
பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கால்நடைகள் திருட்டு

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வேலணை பிரதேசத்தில் அண்மைக் காலமாக பெறுமதிமிக்க வளர்ப்புக் கால்நடைகள்
திருட்டுப்போகும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் பண்ணையாளர்கள் பெரும்
பொருளாதார இழப்பையும் சந்தித்து வரும் நிலை காணப்படுகின்றது.

யாழில் கால்நடைகளை திருட முயன்ற கும்பல்! பொதுமக்களால் மடக்கி பிடிப்பு | Man Arrested Stealing Cattle For Meat

இதேநேரம் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு முறைபாடுகள் செய்தும்
திட்டமிட்ட இந்த திருட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதில் பெரும் சவால்
இருந்து வந்தது.

இதையடுத்து பொதுமக்கள் தமது கால்நடைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேலணைக்கு
வரும் சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் கண்காணிக்கும்
செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தனர்.

கைது செய்யும் நடவடிக்கை

இந்நிலையில் இன்று அதிகாலை பட்டா ரக வாகனம் ஒன்றில் 5 பேரடங்கிய திருடுக்
கும்பல் ஒன்று வங்களாவடிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியதை
அவதானித்த மக்கள் குறித்த நபர்களை பிடிக்க முயன்றபோது அவர்கள் தப்பியோட
முயன்றுள்ளனர்.

யாழில் கால்நடைகளை திருட முயன்ற கும்பல்! பொதுமக்களால் மடக்கி பிடிப்பு | Man Arrested Stealing Cattle For Meat

இதனையடுத்து, மக்கள், பட்டா ரக வாகனத்தை மறித்து அதில் இருந்த
ஒருவரையும் இறைச்சியாக்கப்பட்ட மாட்டுடன்
பிடித்து நயப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், ஏனைய நால்வர் தப்பியோடிய நிலையில் பொலிஸார் அவர்களை கைது செய்யும்
நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்