முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மனைவி – மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன் சடலமாக மீட்பு!

வவுனியா – சமயபுரம் பகுதியில் தனது மனைவி என அறியப்படும் பெண்ணையும் அப்பெண்ணின்
தாயாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில்
இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் சமயபுரம் பகுதியில் நேற்று (07.03.2025) மாலை 7.30மணியளவில்
இடம்பெற்றுள்ளது.

சமயபுரம் பகுதியில் உள்ள வீட்டிற்கு நேற்று இரவு சென்ற உயிரிழந்த நபர் வீட்டில் இருந்த பெண்ணையும் அவரது தாயாரையும் கத்தியால்
குத்திகாயப்படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டினை தீயிட்டு
கொழுத்தியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த இரு பெண்களும் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் குறித்த குற்றச்செயலை புரிந்துள்ளதாக சந்தேகிக்கப்படும்
குடும்பஸ்தர் அந்த வீட்டின் கிணற்றில் வீழ்ந்தநிலையில் சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டுக்கு தீ வைப்பு 

அவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் வீழ்ந்தாரா அல்லது வேறு எதும்
குற்றச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதா என்பது தொடர்பாக பொலிசாரால் தீவிர
விசாரணைகள் முன்னெடுக்கப்படு வருகின்றது.

மனைவி - மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன் சடலமாக மீட்பு! | Man Killed Wife Mother In Law Fell Over Pond

இதேவேளை உயிரிழந்த குடும்பஸ்தரும், காயமடைந்த பெண்ணும் வெவ்வேறு பகுதிகளை
சேந்தவர்கள் என கிராமமக்கள் தெரிவித்ததுடன் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக கடந்த
ஒரு வருடகாலமாக சமயபுரம் பகுதியில் வசித்துவருவதாக
தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அவர்கள்
இருவரும் ஏற்கனவே வெவ்வேறு திருமணங்களை முடித்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட
விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.

சம்பவத்தில் வசந்தி வயது 30,அவரது தாயாரான இந்திரா வயது69, என்ற இரு பெண்கள்
காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கிருஸ்ணகுமார் வயது 45 என்ற
நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.