இலங்கையில் போலி அமெரிக்க டொலர்கள் பாவனை தொடர்பில் வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மினுவாங்கொட பகுதியிலுள்ள வங்கியொன்றில் அதனை மாற்ற வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஸ்நாயக்கபுர பகுதியில் வசிக்கும் 45 வயதான நபரே இந்த மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க டொலர்கள்
மினுவாங்கொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று பிற்பகல் மினுவாங்கொடைநகரில் உள்ள ஒரு வங்கியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது 100 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆறு போலி டொலர் தாள்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.