முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் தொடருந்து கடவைக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளது.
குறித்த நபர் நேற்றிரவு பயணித்த தொடருந்தில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் விசாரணை
இந்த விபத்து தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இருப்பினும், சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

