யாழ்ப்பாணம்- சுழிபுரத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் பொலிஸால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம் (10) வட்டுக்கோட்டை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த சந்தேகநபர் சுழிபுரத்தில் இருந்தே லொறியில் 3
மாடுகளை கடத்திச் செல்ல முற்பட்டவேளை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசாரணை
இந்த நிலையில், சந்தேகநபரை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் மல்லாகம்
நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.