யாழில் (Jaffna) விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (22) இடம்பெற்றுள்ளது.
அச்சுவேலி தெற்கு, அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த தயநாதன் மற்றும் விதுசன் (வயது 32) என்ற இரண்டு
பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “ உயிரிழந்த குடும்பஸ்தர், ஆவரங்கால் சந்தியால் வீதியை கடக்க முற்பட்டுள்ளார்.
இதன்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளொன்று அவர் மீது மோதிய நிலையில் குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.
இந்தநிலையில், படுகாயமடைந்த அவர் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ள நிலையில் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டுள்ளார்.
இதையடுத்து, உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவரை மோதிய மோட்டார் சைக்கிள் சாரதியும் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.